Cibi Quit From Bigg Boss With 12 Lakhs

12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் போட்டியாளர் ஒருவர் என தகவல் கிடைத்துள்ளது.

Cibi Quit From Bigg Boss With 12 Lakhs : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தில் இந்த நிகழ்ச்சி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் 7 பேர் மட்டுமே உள்ள நிலையில் தற்போது பண பெட்டியுடன் போட்டியாளர்களுக்கு டீல் பேசப்பட்டு வருகிறது. மூன்று லட்சத்துடன் தொடங்கிய டீல் தற்போது 11 லட்சம் வரை வந்துள்ளது.

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

இதற்கு முன்னதாக வெளியான புரோமோ 11 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நான் வெளியே செல்ல முடிவெடுத்திருப்பதாக அமீர் பேசுவதுபோல காட்டப்பட்டது. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியது அவர் இல்லை என சொல்லப்படுகிறது.

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

ராஜுவுக்கு அடுத்ததாக பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சிபி 12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் சிபி ரசிகர்கள் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.