மகேஷ் பாபுவுக்கு வில்லனாக சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் சியான் மேனேஜர்.

Chiyaan Vikram in Mahesh Babu Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாக சியான் விக்ரம் வில்லனாக நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் ஹீரோவாக மகேஷ்பாபு நடித்த அவருக்கு வில்லனாக சியான் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அனைத்து மீடியாக்களிலும் தகவல் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது சியான் விக்ரம் அவர்களின் மேனேஜர் இது முற்றிலும் பொய்யான தகவல், மகேஷ் பாபுவுடன் இணைந்து எந்த படத்திலும் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.