மகான் படத்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்த ரசிகர்கள் படக்குழுவினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சியான் விக்ரம்.

Chiyaan Vikram About Mahaan Success : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மகான். இந்த படத்தின் வெற்றி குறித்து சியான் விக்ரம் அறிக்கை ஒன்றின் மூலம் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

Social mediaவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானை கொண்டாடிய அனைவரின் அன்பையும், ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும், பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்.. அழகு. நன்றிகள் பல்லாயிரம்.பாபிக்கு thanx. நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை . சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talent.னு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you.

த்ருவ். தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டு வந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே. வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute. எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock on!மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.