Chepauk Super Gillies won The Match : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

Chepauk Super Gillies won The Match :

தமிழ்நாடு பிரிமீயர் தொடரின் 19-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக அந்த அணியின் ராஜூ மற்றும் கோபிநாத் களமிறங்கினர். கோபிநாத் 1 ரன்னிலும், ராஜூ 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சசிதேவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் கௌசிக் காந்தி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடிய ஹரிஷ் குமார் 20 பந்துகளில் 6 சிக்சர்கள் உள்பட 53 ரன்கள் விளாசினார்.

இதனால் சேப்பாக் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. காஞ்சி வீரன்ஸ் தரப்பில் தாமரை கண்ணன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் !

இதையடுத்து, 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் தொடக்க வீரர்கள் விஷால் 10 ரன்னிலும், லிங்கேஷ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய சதிஷ் அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தார்.

Chepauk Super Gillies won The Match : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.