சென்னையில் கடந்த 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க இயலாது. ஒரு இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது.

சென்னை புறநகர் பகுதியின் தாழ்வான  பகுதிகளில் எல்லாம் வெள்ளநீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், எண்ணூரில் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின் நிருபர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் நித்தியானந்த் ஜெயராமன் கூறியதாவது, எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பால் விரைவில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும், சட்டத்தை மீறி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு  இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.