சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிப்பு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழும் பி.வாசு இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், மனோபாலா, லட்சுமிமேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம் எம் கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது தொடர்ந்து இதன் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சிறப்பு போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.