சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்ன பன்முகத் திறமைகளுடன் விளங்கி வரும் இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, கங்கனா ராணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதனால் இப்படம் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் புது அப்டேட்டாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வேட்டையன் ராஜாவாக கம்பீரமாக இருக்கும் ராகவா லாரன்ஸின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையதளத்தில் லைக்குகளை குறித்து பயங்கரமாக வைரலாகி வருகிறது.