வேட்யைன் லுக்கில் வெளியான சந்திரமுகி 2 போஸ்டரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரெனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் இருந்து ராகவா லாரன்ஸின் வேட்டையன் லுக் ரிலீஸ் தேதியுடன் இன்று காலை வெளியானது. போஸ்டர் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் அதிகமாகி கொண்டே வருகிறது.
காரணம் இந்த போஸ்டரை பார்த்தால் மாஸாக இல்லை, காமெடியாக இருக்கிறது என பலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர் இது நாய் சேகர் லுக் போலவே இருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர்.
சந்திரமுகி 2 வேட்டையன் லுக் பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட்டில் சொல்லுங்க