சந்திரமுகி 2 திரைப்படத்தின் புதிய டப்பிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது பிரபல முன்னணி இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால் இதன் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கும் வடிவேலு ‘எத்தன பார்ட் வந்தாலும் சரி சந்திரமுகி ஓட பெஸ்ட் பிரண்டு நான்தான்’ என காமெடியாக பேசி இருக்கும் டப்பிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வடிவேலுவுடன் சந்திரமுகியின் மிரட்டலான குரலும் இடம்பெற்றுள்ளதால் அது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.