சூர்யாவுடன் ‘தண்டேல்’ பட இயக்குனர் சந்திப்பு; இவரது ஆர்வம் நிறைவேறுமா?
இயக்குனர் சந்து மொன்டட்டியின் ஆர்வம் நிறைவேறுமா? அதற்கு சூர்யா ஒகே சொல்வாரா? என்ற தகவல்கள் பார்ப்போம்..
நாக சைதன்யா-சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கும் ‘தண்டேல்’ படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்கிய சந்து மொன்டட்டி சூர்யாவை சந்தித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
‘நான் சூர்யா சாரை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேசினோம். என் கதையை அவர் ஏற்பார் என நம்புகிறேன். அவர் ஒப்புக் கொண்டால் முதலில் சூர்யா சார் படத்தை தான் இயக்குவேன். ‘கார்த்திகேயா 3′ படத்தை பின்னர் இயக்குவேன்’ என்றார்.
சந்து மொன்டட்டிக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்தால், சூர்யாவுக்கு ஒரு பெரிய ஹிட் கொடுக்காமல் ஓய மாட்டார் போல. அதனால், சந்து மொன்டட்டி இயக்கத்தில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் வருகிறது. சந்து மொன்டட்டிக்கு ஓகே சொல்வாரா சூர்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சூர்யாவும், சந்து மொன்டட்டியும் கூட்டணி சேர்ந்தால் அந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சூர்யா சென்னையில் அகரம் அறக்கட்டளைக்காக புது அலுவலகத்தை கட்டியிருக்கிறார். அகரம் அறக்கட்டளை மூலம் பலருக்கு கல்வி கொடுத்து வரும் சூர்யா இந்த புது அலுவலகத்தால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
சொந்தமாக வீடு கட்டியபோது கிடைத்த சந்தோஷத்தை விட அகரம் அறக்கட்டளைக்கு புது அலுவலகம் கட்டியபோது தான் அதிக சந்தோஷம் கிடைத்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த நல்ல காரியம் தொடர பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்துவோமே.!