எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Censored Details of Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து இந்த படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய சென்சார் தகவல் வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை ஆட்டம் : அயர்லாந்தை அலற விடுமா, இன்று இந்திய அணி

இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD