சிவகார்த்திகேயன் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கவின் மோனிகா ரிசப்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். இதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரத் தொடங்கிய இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இவருக்கும் மோனிகா என்ற இவரது தோழிக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப் குமார் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர்.

இவர்களது திருமண ரிசப்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.