கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்ததை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இதனால் மிகுந்த உற்சாகத்துடன் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு புதிய அறிவிப்பாக தற்போது படக்குழு தனுஷின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தற்போது இணையதள பக்கங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு பயங்கரமாக வைரலாகி வருகிறது.