கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கும் சிவராஜ்குமார் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருந்த நிலையில் முக்கிய தகவலாக கேப்டன் மில்லரில், தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார் படத்தில் கொள்ளையனாக நடித்திருப்பதாகவும் அவர்தான் படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து வைரலாகி வருகிறது.