அஜித் 100 கோடி சம்பளம் வாங்கும் 62 ஆவது படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசை அமைக்க உள்ளார்.

இந்த படத்திற்கு அஜித் 100 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக ஏற்கனவே தெரியவந்த நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமா இந்த படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

துணிவு படத்தின் மூலமாக தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அஜித்தின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. துணை படம் தமிழகத்தில் தயாரிப்பாளருக்கு 60 முதல் 70 கோடி வரை ஷார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இந்த படத்தை என்பது கோடி ரூபாய்க்கு விற்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளை துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அஜித் 62 படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனமே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் படக்குழுவினருக்கு லாபம் அதிகமாக கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.