வலிமை படம் தள்ளி போயுள்ள நிலையில் போட்டி நிறுவனங்கள் படத்தை வாங்க போட்டி போட்டு வியாபாரம் பேசி வருகின்றனர்.

Boney Kapoor Decison on OTT Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

ஆனால் இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இதன் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இதனால் பல OTT நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க போட்டி போட்டு வருகின்றன. 200 கோடி வரை இந்த படத்தை வாங்க வியாபாரம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் போனிகபூர் எதற்கும் பதில் சொல்லாமல் படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவேன் என உறுதியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.