ட்விட்டர் நிறுவனம் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களின் ட்விட்டர் அக்கவுண்டிற்கு ப்ளூ டிக்கெட் வெரிஃபைட் பேஜ் வழங்கியிருக்கிறது. ஆனால் நேற்று இரவு நடிகர் தனுஷின் ப்ளூ டிக்கெட்டை twitter நிறுவனம் திடீரென நீக்கி விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். நேற்று இரவு தனுஷின் twitter அக்கவுண்டில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான “The Gray Man” திரைப்படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

இதனைப் பார்த்த தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வந்த நிலையில் திடீரென்று தனுஷின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்த ப்ளூ டிக்கெட் நீக்கப்பட்டது. இதனால் தனுஷின் ரசிகர்களின் இடையே அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. பின்பு சிறிது நேரம் கழித்து மீண்டும் ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கெட்டை வழங்கியது.

பொதுவாக ட்விட்டர் நிறுவனம் நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக் என்னும் வெரிபைடு பேட்ஜ் வழங்கி வருகிறது. ஆக்டிவாக இல்லாத அக்கவுண்டுகள் மற்றும் அக்கவுண்டின் பெயரை மாற்றினால் இவ்வாறு ப்ளூ டிக் நீக்கப்படும்.

ஆனால் நடிகர் தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எந்த ஒரு காரணமும் இதுவரை ட்விட்டர் நிறுவனம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு தோனியின் அக்கவுண்டில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்பு சிறிது நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டது. ஏன் இவ்வாறு ட்விட்டர் நிறுவனம் செய்கிறது என்ற கேள்வியுடன் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றன.