ஆன்ட்டி இந்தியன் படத்திற்கு வந்த எதிர்மறை விமர்சனத்தை ரீட்வீட் செய்த நிறுவனத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

Blue Sattai Reply to Negative Reviews : தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆன்ட்டி இந்தியன்.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet

இந்த படத்தில் இசை ஒளிப்பதிவு இவை இரண்டும்தான் குறை மற்றபடி படத்தில் புதிய விஷயத்தை கையில் எடுத்து அதனை நேர்த்தியான முறையில் முயற்சி செய்துள்ளார் மாறன் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் நாககநாதன் என்பவர் இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்து ஒரு டுவிட் செய்துள்ளார். இதனை பிரபல நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி- ட்வீட் செய்துள்ளது.

விபத்தான ஹெலிகாப்டரின் விமானி, தன் குடும்பத்தினருடன் பேசிய கடைசி உரையாடல்..

இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் உங்களது விளம்பரத்திற்கு நன்றி ஷக்தி பிலிம் பேக்டரி நிறுவனம். உங்கள் தயாரிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல், ஜீனியஸ், ஜாக்பாட், உரியடி 2, டிரிப் போன்ற பல்வேறு படங்களை நாங்கள் ரசித்துப் பார்த்தோம் என பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி பெரும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற படங்களை குறிப்பிட்டு தான் ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு பதிலடி தந்துள்ளார்.