Bigi Trailer
அரை மணி நேரத்தில் பிகில் பட ட்ரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கதிர், யோகி பாபு, இந்துஜா, விவேக், ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கிட்டத்தட்ட 3 நிமிட கால அளவுடைய பிகில் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான 30 நிமிடத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.