விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் படத்தின் பட்ஜெட்டை இயக்குனர் அட்லீ இரண்டு மடங்காக ஏற்றிவிட்டது தெரியவந்துள்ளது.

Bigil movie budget ended up with double – பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர் என்பதாலோ என்னவோ, அவரைப் போலவே அல்லது அவருக்கு மேலே ஒரு படி சென்று பட்ஜெட்டை இழுத்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இயக்குனர் அட்லீ. விஜயை வைத்து இதற்கு முன் தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய போதும் இதுதான் நடந்தது.

செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மாணவர் மரணம் – கோவையில் அதிர்ச்சி

‘தெறி’ திரைப்படத்தை முதலில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது. ஆனால், சொன்ன பட்ஜெட்டை மீறி அட்லீ படத்தை எடுத்ததால் ‘ஆளை விட்றா சாமி’ என அந்நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியது. அதன்பின், அப்படத்தை கலைப்புலி தானு கையில் எடுத்து தயாரித்தார். மெர்சல் படத்தின் போதும் அதுதான் நடந்தது. கூறிய பட்ஜெட்டை விட பல கோடிகள் அதிகமகாவே படத்தை முடித்தார் அட்லீ.

atlee

எனவேதான், பிகிலை அவர் துவங்கிய போது, சரியான பட்ஜெட்டை கூற வேண்டும் என அவரிடம் ஏஜிஎஸ் நிறுவனம் வற்புறுத்தியாக கூட செய்திகள் வெளியானது. இப்படத்திற்கு சம்பளமாக ரூ.70 கோடியும், ரூ.50 கோடி தயாரிப்பு செலவு என அட்லி கொடுத்த பட்ஜெட் ரூ.120 கோடி. ஆனால், படத்தை அவர் முடித்தது ரூ.240 கோடி என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். இதில் பட்ஜெட் ரூ.180 கோடி எனவும், வட்டி எல்லாம் சேர்த்து ரூ.230 லிருந்து ரூ.240 கோடி வரை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதை ஈடுகட்ட வேண்டுமெனில் பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வரை வசூலிக்க வேண்டும். தவறினால் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையே கொடுக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

TRP மன்னனாக மாறிய தளபதி விஜய் – பிகில் படம் சாதனை .!

பட்ஜெட்டோ அல்லது நஷ்டமோ, ஏஜிஎஸ் போல பெரிய நிறுவனங்கள் அதை தாங்கி விடும். ஆனால், தேனாண்டாள் போல தயாரிப்பாளர்கள் கதி என்ன ஆகும் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. படம் எடுத்த நஷ்டத்தில் பல தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்ததை தமிழ் சினிமா உலகம் பார்த்துள்ளது. இதை அட்லீ போன்ற இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.