Bigil Release Date
பிகில் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

பிகில் மெகா ஸ்டார் படம் என்பதால் எப்படியும் அதிகாலையிலேயே படம் ரிலீசாகி விடும் என ரசிகர்கள் கணக்கு போட்டு வைத்திருந்தனர்.

ஆனால், இப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழக்க கூடாது என்ற முடிவில் தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆனால் படம் பெரிய பட்ஜெட் என்பதால் அதிகாலை காட்சி நிச்சயம் வேண்டும் என்ற முடிவில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது.

இறுதியில் என்ன நடக்க போகிறது? பிகிலுக்கு அதிகாலை காட்சி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.