bigil

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது.

ரவுடியிசம், பெண்கள் முன்னேற்றம், கால்பந்து விளையாட்டு என பல விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது. இதில், விஜய் கால்பந்து விளையாடும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையிலேயே விஜய்தான் செய்தாரா அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்டதாக என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில், இதுபற்றி பிகில் திரைப்பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆனாலும், ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக எதாவது செய்ய வேண்டும்மென்றால் அதற்ககாக முறையாக பயிற்சி செய்வார். அதைக்கற்று கொண்டு நானே செய்கிறேன் என பிடிவாதமாக இருப்பார்.

அப்படித்தான் பிகில் படத்தில் அவர் புட்பால் விளையாடுவது போல் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு கிராபிக்ஸ் வேண்டாம். நானே செய்கிறேன் எனக்கூறி பயிற்சிகள் எடுத்தார். படப்பிடிப்பில் அதை சிறப்பாக செய்தும் காட்டினார். எனவே, அக்காட்சிகள் கிராபிக்ஸ் இல்லை’ என அவர் தெரிவித்தார்.