Web Ads

எதுக்காக நீங்க இந்த சீசனுக்கு கண்டஸ்டெண்டா வந்திருக்கீங்க? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 28 promo 2 update
biggboss tamil 9 day 28 promo 2 update

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஹவுஸ் மேட்ஸ் இடம் இந்த சீசன்ல நீங்க எதுக்காக போட்டியாளரா கலந்துக்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வியை கேட்க அவர்கள் ஒரு பேப்பரில் பதிலை எழுதுகின்றனர்.

அதில் முதலாவதாக பார்வதியின் நான் யார் என்று தெரிந்தும் ரியலா இருப்பதற்கும் என்று எழுதிப் படிக்க அதை சான்ட்ரா அப்ப நீங்க ரியலா இருக்கீங்களா என்று கேட்கிறார். பிறகு பார்வதி எழுதிய பேப்பரை கிழித்து போடுகிறார் பிறகு கம்ருதீன் எழுதிய பேப்பரையும் பிரஜின் கிழித்து போடுகிறார். இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.