பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஷால் குடும்பத்தினர்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே தீபக் மற்றும் மஞ்சரி வீட்டிலிருந்து வந்ததை தொடர்ந்து தற்போது விஷால் வீட்டிலிருந்து அவர்கள் குடும்பத்தினர் அம்மா அப்பா என அனைவரும் வந்துள்ளனர். விஷால் ஓடி வந்து அழுது கொண்டே கட்டி அணைத்து அம்மாவிற்கு முத்தம் கொடுக்கிறார். அப்பா வரலையா என்று கேட்க நீதான் சண்டை போட்டுட்டு அதனால வரலை என்று சொல்ல உடனே அவரும் வருகிறார் இருவரும் கட்டி அணைத்து கண்கலங்குகின்றனர் விஷாலின் அப்பா விஷாலிடம் மன்னிப்பு கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram