விஜய் சேதுபதி கொடுத்த டாஸ்க்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் விளையாடப்பட்டது. அதில் ராஜாவாக ராணவும் ராணியாக சச்சனாவும் இருந்தனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ராஜாவின் ஆட்சி நடந்ததா ராணியின் ஆட்சி நடந்ததா என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.
அதற்கு போட்டியாளர்கள் ராணவ் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லுகின்றன.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் என்ன பத்தி ஒரு ஒப்பினியன் வச்சுக்கிட்டு அவங்க இது மாதிரி சொல்லி இருக்காங்க என்று சாச்சனா சொல்ல, சௌந்தர்யாவும் எடுத்து இருப்பாங்களோ என்று தான் கேட்டோம் என்று சொல்லுகிறார். அப்போ சாச்சனா மேல பழி போட்டீங்க அப்படித்தானே என்று கேட்கிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முதல் நாளில் தொடங்கி, இத்தனை நாள்ல முடிஞ்சு போச்சு என்று சொல்லக்கூடிய போட்டியாளர்கள் யார் என்று கேட்க முத்துக்குமரன் அன்சிதாவிற்கும், விஷால் ஜாக்லீனுக்கும், ஜாக்லின் விஷாலுக்கும், கொடுக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram