ஆண் போட்டியாளர்களின் குற்றச்சாட்டு, மாற்றப்பட்ட மேனேஜர்.. வெளியான நான்காவது பிக் பாஸ் ப்ரோமோ..!
ஆண் போட்டியாளர்களின் குற்றச்சாட்டால் மேனேஜர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை முற்றிலும் புதுமையாக ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீடு ஸ்டார் ஓட்டலாக மாறி பெண் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் ஆட்களாக மாறி இருந்தனர். ஆண் போட்டியாளர்கள் அந்த ஹோட்டலுக்கு வரும் கெஸ்ட் ஆக மாறி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வெளியான நான்காவது புரோமோவில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாக சொல்ல பெண் போட்டியாளர்களின் மேனேஜராக இருந்த பவித்ரா மாற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். இதனால் பவித்ரா கண் கலங்கி அழுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram