குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!
குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவரது மனைவி உமா ரியாஸ். இவர் தற்போது கயல் சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இவர்களுக்கு ரியாஸ் என்ற ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் மரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவரது மனைவி மரியாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
என் வாழ்க்கையின் காதலுக்கு இதுவரை இல்லாத சிறப்பு பரிசை கொடுக்க விரும்பினேன் அதனால் நான் அவளுக்கு என் மினி பதிப்பை கொடுத்தேன் ஜூன் 28 2025 அன்று நாங்கள் ஆண் குழந்தையை வரவேற்கிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram