
எனக்கு கூட அப்படி சொல்லணும்னு தோணல.. ஆனால்? சௌந்தர்யா குறித்து முத்துக்குமரன் நெகிழ்ச்சி..!
சௌந்தர்யா குறித்து பேசியுள்ளார் முத்துக்குமரன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்தனர்.
பிக் பாஸ் மேடையில் நடந்த ஒளிபரப்பு செய்யப்படாத சில விஷயங்கள் குறித்து முத்துக்குமரன் பேசியுள்ளார். டைட்டில் வின் பண்ணிய பிறகு சௌந்தர்யா விஜய் சேதுபதி இடம் நல்லவேளை என் கையை தூக்கல இல்லனா எங்க அப்பா டைட்டில் வாங்கி முத்துக்குமரன் கிட்ட கொடுத்திருப்பார் என்று சொல்லி ஜாலியாக பேசியிருப்பார்.
ஆனால் டைட்டில் கொடுப்பதற்கு முன் சில விஷயங்கள் நடந்துள்ளது. அது குறித்து முத்துக்குமரன் கூறியிருக்கிறார். அதாவது விஷால் எலிமினேஷன் ஆன பிறகு நானும் சௌந்தர்யாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சௌந்தர்யா நீ தான் டைட்டில் வின்னராக போற டைட்டில் வின்னரானோ எங்களை மறந்துடாத என்று சொன்னார் நான் பதற்றத்தில் இருக்கும் போதும் சௌந்தர்யா ஸ்கூலாக என்னை பார்த்து இப்படி சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆனால் என்னால் ஒரு பேச்சுக்கு கூட நீதான் வெற்றி பெறுவாய என்று என்னால் சொல்ல முடியவில்லை அது ஏன் என்று எனக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை அதுதான் சௌந்தர்யா அந்த மனது பெரிய விஷயம்தான். சௌந்தர்யா ரொம்ப நல்ல பொண்ணு என்று பேசி இருப்பது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
