கமல் டாஸ்க் ஒன்றின் மூலம் கொளுத்திப் போட பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது.

Bigg Boss5 Day28 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இன்று இருபத்தி எட்டாவது நாள் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கொளுத்திப் போட்ட கமல்.. அக்ஷரா, பிரியங்கா மற்றும் நிரூப் மோதல் - வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் கமல் டாஸ்க் ஒன்றைக் கொடுக்க அதில் கன்ஃப்யூஸ் ஸ்டேட்டில் இருப்பது அக்ஷரா தான் என பிரியங்கா அவருக்கு பேட்ஜ் கொடுக்க பதிலுக்கு பிரியங்காவிற்கு மற்றவர்களை காயப்படுத்துபவர் என அக்ஷரா பேட்ஜ் கொடுத்துள்ளார்.

அதேபோல் அக்ஷராவுக்கு நிரூப் பொய்யானவை என பேட்ஜ் கொடுத்துள்ளார்.