Bigg Boss5 Day12 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர்தான் தாமரைச்செல்வி. இவர் ஒரு நாடக கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று பன்னிரண்டாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா இந்த வீட்டிலே நல்ல பிள்ளையா எல்லா வேலையையும் செய்கிறது யார் எனக் கேட்டால் நீ யாரை சொல்லுவ என தாமரைச்செல்வியிடம் கேட்கிறார்.

அதற்கு தாமரைச்செல்வி நான் மூணு பேரை சொல்லுவேன் என கூறுகிறார். நான் உன் பிரண்டு தானே. நீ என் ப்ரெண்டா இருக்கறதுனால எனக்கு என்ன ஆதாயம்? இப்போ சொல்லு யாரை சொல்லுவ என கேட்க தாமரைச்செல்வி நான் நாடியாவை சொல்லுவேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனால் பிரியங்காவிற்கு செம பல்ப்பாகி விடுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.