கணவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு உயிர், உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நயன்தாரா தற்போது காதல் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு எல்லாமும்மாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இது மட்டும் இல்லாமல் உன் மீது வைத்த காதலை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை . கடவுள் உன் வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.