விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று முத்தழகு. மூன்று முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே செல்லமா சீரியல் முடிவடைந்து அதற்கு பதிலாக “அன்புடன் கண்மணி”என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முத்தழகு சீரியலும் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் முத்தழகு சீரியல் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.