பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து சற்று ஓய்வு எடுப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்தது.

அப்போதுதான் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சி அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பிடித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.