யாருக்கெல்லாம் ஓட்டு போடக்கூடாது? போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ..!!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி எனக்கு ஓட்டு போடலனா கூட பரவால்ல இவங்களுக்கு போடாதீங்க என்று யாரை சொல்வீர்கள் என்று கேட்க அதற்கு தீபக் மற்றும் அன்சிதா இருவரும் ராணவை சொல்லுகின்றனர். ஜாக்லின் விஷாலுக்கு ஓட்டு போடக்கூடாது என்று நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே முத்துக்குமரன் தயவுசெய்து சௌந்தர்யாவிற்கு ஓட்டு போடாதீங்க என்று சொல்லுவேன் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram