விஷால்,தர்ஷிகா காதல் கதை.. ஓபனாக பேசிய பவித்ரா,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நேற்றிலிருந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பொம்மை டாஸ்க் தொடங்கியுள்ளது.
அதில் போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக விளையாட விஷால் மற்றும் ஜாக்லின் இடையே பிரச்சனை உருவாகிறது. தேவையில்லாம நீ தான் வந்து பேசின என்று ஜாக்லினிடம் கேட்க நான் ஒன்னும் பேசல என்று சொல்லுகிறார்.
பவித்ரா ஆனந்தியிடம் தர்ஷிகா கிட்ட போய் ஏதாவது பேசணும்னா கூட எனி டைம் விஷால் கூடவே இருக்கான். ஒரு கையில அடிபட்டுருக்கு அதை இன்னொரு கையிலேயே தடவி விடலாம் ஆனால் மருந்து விஷால் போட்டுக்கிட்டு இருக்கான்
தர்ஷிகா சாப்பிடலனா உடனே அருண் வந்து விஷாலிடம் சாப்பிடல என்னன்னு போய் பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். எதுக்கு இதெல்லாம் தேவையே இல்லாதது என்று ஆனந்தியிடம் சொல்லுகிறார். இதே மாதிரி பண்ணிட்டு இருந்தாங்கன்னா சண்டை தான் வரும் என்று சொல்லுகிறார் பவித்ரா.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram