
பிக் பாஸ் சீசன் 7-ல் 4 நாயகிகள் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 8ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக நேற்று தகவல் வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு உருவாக்கப்பட இருப்பதாகவும் அதில் ஒன்று சொகுசு வீடு, இன்னொன்று மிகவும் சாதாரண வீடு எனவும் தகவல் வெளியானது.
இதனால் இந்த முறை நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இதில் போட்டியாளர்களாக பங்கேற்க போகும் நான்கு நாயகிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- விஜே ஜாக்குலின்
- ராஜா ராணி அர்ச்சனா
- தமிழும் சரஸ்வதியும் நட்சத்திரா
- பாரதி கண்ணம்மா பரீனா
இந்த நான்கு பேர்தான் அந்த நாயகிகள் என தகவல் வெளிவந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
