Bigg Boss season 3 : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television

தெலுங்கு பிக் பாஸ் கூடிய விரைவில் துவங்க உள்ளது இதில் பிரபல நடிகை ஷோபிதா பங்கேற்பதற்காக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

Bigg Boss season 3 : இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

அவதார் சாதனையை முறியடிக்க அவெஞ்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான் – எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

இதைதொடர்ந்து மூனாவது சீசன் அண்மையில் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால்,

மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸ் கூடிய விரைவில் துவங்க உள்ளது இதில் பிரபல நடிகை ஷோபிதா பங்கேற்பதற்காக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இதில் உண்மையில்லை எனவும் தனக்கு பிக் பாஸில் உடன்பாடு இல்லை எனவும் அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.