Raiza
Raiza

பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

Bigg Boss Raiza Childhood Photo : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக மாடலிங் துறையை சேர்ந்தவராகவும் வலம் வருபவர் ரைசா வில்சன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னதாகவே நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பியார் பிரேம காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Raiza Wilson Latest Photos

சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரைசா.

அந்த வகையில் இவர் தற்போது அப்பா மற்றும் சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தியமா சொல்லுங்க நீங்களா இது?? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிறுவயதில் அந்த அளவிற்கு அடையாளம் தெரியாதபடி இருந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்