Bigg Boss Day23 Promo Reaction : Fans Funny Comments is Here | Bigg Boss | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு மொக்கையா போயிடு இருக்கு, இதெல்லாம் ஒரு ப்ரோமோவா என கவலைப்படுகின்றனர்.

Bigg Boss Day23 Promo Reaction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் வனிதா. அவர் இருக்கும் வரை வீட்டிற்குள் எதற்கெடுத்தாலும் சர்ச்சை சண்டை என பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததில்லை.

வனிதா வெளியேற்றப்பட்ட மறுநாளே பிக் பாஸ் டீம் கன்ப்யூஸ் ஆகி விட்டது, எந்த ப்ரோமோவை போடுவது? என தெரியாமல் ஒரு வீடியோவை போட்டு அதனை டெலீட் செய்து மீண்டும் போட்டனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் என்னால பாத்ரூம் டீம்ல இருக்க முடியல என மோகன் வைத்யா கூற அதன் பின்னர் பாத்ரூமில் சாக்ஷியிடம் சண்டையிடுகிறார்.

இது எதனால் நடந்தது? ஏன் நடந்தது என்பதெல்லாம் இன்று இரவு தான் தெரிய வரும். ஆனால் இவ்வளவு மொக்கையான ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகியுள்ளனர்.

அவர்கள் கருத்துகளை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.