முதல் சீசனை போல பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனும் இனி வர சீஸனும் இருக்காது என ஓவியா தெரிவித்துள்ளார்.
Bigg Boss Oviya Marriage : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சி வரை பலருக்கும் யாரென்றே தெரியாமல் இருந்து வந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் அறிந்த நடிகையானார்.
மாடர்ன் என்ற பெயரில் ரித்விகா செய்த வேலை – வைரலாகும் புகைப்படங்கள்.!
இவர் தற்போது விமலுடன் சேர்ந்து சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியா பேசிய போது பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போல் இருக்காது, அந்த அளவிற்கு சுவாரஷ்யம் இருக்குமா என்பது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.
மேலும் அதற்கான காரணம் நாங்கள் உள்ளே சென்ற போது இது புதிய நிகழ்ச்சி. இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார்.
காதலில் விழுந்தார் கவின், அவரின் ஜோடி இவர் தான் – இரண்டாவது ப்ரோமோ வீடியோ
ஆனால் தற்போது பிக் பாஸ் என்றால் என்ன? எப்படி இருக்கும்? என்ற விசயங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் திருமணம் குறித்து கேட்டதற்கு அப்படியொரு ஐடியா இல்லை, இப்படி இருக்கிறதே நன்றாக இருக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.