
விஜய் மகன் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss Kavin in Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜாக்சன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக நுழைய உள்ளார்.

இவரது இயக்கத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் கவின் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து கவின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது. கவின் தொடர்ந்து தரமான இயக்குனர் உடன் இணைந்து வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.