மரியாதை இல்லாமல் பேசிய சரவணனால் சேரன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
Bigg Boss Day40 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 40-வது நாள் இன்று. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சேரன் நாடகமாடுகிறார், எனக்கு நடந்தது கல்யாணமே கிடையாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!
முதல் ப்ரோமோ வீடியோவில் சரவணன் சேரனை கேவலமாக மரியாதை இல்லாமல் நேருக்கு நேர் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகி இருந்தது.
இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சரவணனை போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது அவர் லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு என மீண்டும் சேரனை தாக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
மீண்டும் சரவணன் மரியாதை குறைவாக பேசியதால் சேரன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
#Day40 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HSSCYbNfT1
— Vijay Television (@vijaytelevision) August 2, 2019