Bigg Boss Archana 1st Video After BB

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அர்ச்சனா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Archana 1st Video After BB : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நாளையோடு இந்த நிகழ்ச்சி என்பது நாட்களை நிறைவு செய்ய உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீட்டிற்கு சென்றதும் அவரை அவருடைய வீட்டார் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்த வீடியோவை அர்ச்சனா தன்னுடைய சமூக வலைத்தள பக்கம் மற்றும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அர்ச்சனா தன்னுடைய மகள் அம்மா கணவர் ஆகியோரை கண்டதும் கண்ணீர்விட்டு அவர்களோடு பாசத்தை பரிமாறிக் கொண்டுள்ளார். அவர் வீட்டு நாய் கூட அர்ச்சனாவை கண்டதும் கட்டியணைத்து பாசத்தை பரிமாறி கொண்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

YouTube video