
பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மாயா மற்றும் அவரது டீம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில் நாமினேஷன் பட்டியலில் அதற்கேற்றார் போல மாயா டீமை சார்ந்த பூர்ணிமா, ஐசு ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

நேற்று வரை அனைவரையும் காட்டிலும் பூர்ணிமா மிகக்குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் இறுதி நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐசு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக இவரது வெளியேற்றத்திற்கு காரணம் ஓட்டுகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரின் கோரிக்கையும் தான் என சொல்லப்படுகிறது. ஐசுவின் நடத்தை பற்றி கொந்தளித்த அவர்களது பெற்றோர் பிக் பாஸ் இருக்கும் சென்று தங்களது மகளை இப்போவே வெளியே அனுப்ப வேண்டும் என பிரச்சனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.