
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது.

இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது முதல் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது பற்றிய தகவல் கசிய தொடங்கியுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் முதல் போட்டியாளராக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
ப்ரோமோ வெளியானால் இன்னும் இந்த தகவல் உறுதியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
