கேப்டன் ஆனதும் மாயாவுக்கு விஷ்ணு செக்மேட் வைக்க பதிலுக்கு மாயா விஷ்ணுவின் தில்லாலங்கடி வேலைகளை உடைக்க தொடங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஷாப்பிங் டாஸ்கின் பொறுப்பில்லாத இருவரை தேர்வு செய்து ஷாப்பிங் அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் லெட்டர் அனுப்ப விஷ்ணு அனன்யா மற்றும் மாயாவை தேர்வு செய்கிறார்.
இதனால் மாயா இது வேணும்னே பிளான் போட்டு பழிவாங்கும் செயல் என்று சொல்ல நான் உங்கள தான் அனுப்புவேன் என விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட நீங்க கேப்டன் ஆனதே ஸ்டேட்டர்ஜி தான். நீங்க என்னையும் பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கீங்கன்னு எல்லாத்தையும் சொல்லுவேன் என பதிலடி கொடுக்கிறார்.