Bigg Boss 3rd Elimination Update

பிக் பாஸ் வீட்டில் இருந்தே இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது ‌

Bigg Boss 3rd Elimination Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் முடிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நடிகையின் ரேகா மற்றும் பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது.

Suresh Chakravarthy

நேற்று வரை கிடைத்த வாக்குகளின் படி நடிக்க சோம் சேகர் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தான் குறைவான ஓட்டுகள் பெற்று இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

மேலும் சோம் சேகர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தான் குறைவான ஓட்டுகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது நாளைய எபிசோடில் தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.