பிக் பாஸ் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யார் என்பது பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss 3 Title Winner : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இந்த வாரத்தோடு முடிய உள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் முகேன், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி என நான்கு பேர் மட்டுமே உள்ளே உள்ளனர். இவர்களில் முகேன் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கோல்டன் டிக்கெட் வென்ற முகேன்.. அபிராமி பதிவில் தர்ஷன் காதலி பதிவிட்ட கமெண்ட்டை பார்த்தீங்களா?
தற்போதைய ஓட்டிங் நிலவரத்திலும் முகேன் தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். முகேன் டைட்டில் வின்னர் ஆனால் நிச்சயம் மக்கள் ஏற்று கொள்வார்கள்.
ஆனால் ரன்னராக ஷெரினின் பெயரை அறிவிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஓட்டிங் நிலவரப்படி லாஸ்லியா தான் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இறுதியில் யார் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.