பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஷோ தான் பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது இந்த ஷோவின் முதல் வாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த வாரத்திற்காக முதல் நாமினேஷன் தேர்வு நேற்று நடைபெற்றது. அந்த தேர்வில், க்யுன்சி, மகேஸ்வரி, ஆயிஷா, ரட்சிதா, தனலட்சுமி, ஷெரினா, ஷிவின், கணேசன், சாந்தி, விக்ரமன், அசிம், நிவாஷினி, ராம் ராமசாமி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகியுள்ளனர். தற்போது இந்த லிஸ்ட் வைரல் ஆகி வருகிறது.