“தவமாய் தவமிருந்து” என்ற சீரியலில் நடித்திருக்கும் ஜூலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Big boss Julie acted in serial:

மெரினா கடற்கரையில் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலியானா. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மக்களின் இடையே வெறுப்புகளை மட்டும் பெற்றிருந்தார்.

சீரியலில் இணைந்துள்ள பிக்பாஸ் ஜூலியானா - வைரலாகும் வீடியோ.

ஆனாலும் மன தைரியத்தோடு போட்டோ ஷூட் செய்துகொண்டு அடுத்தகட்ட வேலையில் செய்துகொண்டிருந்த ஜூலி. சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கினார்.

சீரியலில் இணைந்துள்ள பிக்பாஸ் ஜூலியானா - வைரலாகும் வீடியோ.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஜூலியானா மக்கள் மனதை மாற்றி தன் மீதுள்ள வெறுப்பினை போகி விட்டார் என்றே சொல்லலாம். இதையடுத்து இவர் சினிமாவில் நடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜூலி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “தவமாய் தவமிருந்து”என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

Thavamai Thavamirundhu (தவமாய் தவமிருந்து) - | Mon-Sat 7 PM | Zee Tamil | Promo